எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது.
முக்கியமாக
- மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம்
- ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம்
- பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) – தமிழ்
இடைமுகப்புடன் அறிமுகம் - கட்டற்ற தமிழ் மென்பொருள் விநியோகம்(பயர்பாக்ஸ் உலாவி, லிப்ரேஓபிஸ்,
இ-கலப்பை மற்றும் உபுண்டு லினக்ஸ் வட்டுகள்) – கேட்பவர்களுக்கு நிறுவியும்
தரப்படும்
கூடுதலாக
- தமிழாவின் திட்டங்களைப் பற்றிய அறிமுகமும் – ஆள் சேர்த்தலும்
- தமிழாக்கத்தில் பங்களிப்பது எப்படி ? – வழிகாட்டல்
- கைப்பேசிகளுக்கான தமிழ் மென்பொருட்கள் – நிறுவித் தரப்படும்
உங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அத்தோடு இதற்கு ஆதரவு நல்கிய உத்தமத்திற்கும்(திரு மணியம்) மொசில்லா
அறக்கட்டளைக்கும் தமிழா குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அத்தோடு இதற்கு ஆதரவு நல்கிய உத்தமத்திற்கும்(திரு மணியம்) மொசில்லா
அறக்கட்டளைக்கும் தமிழா குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.